Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொண்டேன்….. நீங்களும் போடுங்க…. பிரதமர் மோடி….!!!!

மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தடுப்பூசித் திட்டத்தில் நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது எனவும் கடந்த ஆண்டு தடுப்பூசி குறித்த பல்வேறு கேள்விகள் இருந்தன. இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் கொண்டு லட்சக் கணக்கானோருக்கு செலுத்தப்படுகிறது என கூறினார்.

நான் இரண்டு தவணை தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டேன். 100 வயதை எட்டும் எனது தாயாரும் இரண்டு தவணை தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டார் எனவும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Categories

Tech |