தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக திரண்டு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.