தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் ஜூலை 1 ஆம் தேதி முதல் வாடகை உயர்த்தப்படுவதாக பிலால், லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.டீசல் விலை உயர்வு காரணமாக பழைய வாடகையில் வாகனங்களை இயக்க முடியவில்லை என்பதால் 1ஆம் தேதி முதல் லாரிகளின் வாடகை உயர்த்தப்பட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.