இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில், இந்தியா பல உதவிகள் செய்தது. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 100 மில்லியன் மதிப்புடைய உதவி பொருட்களை அறிவித்திருந்தார்.
மேலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு, 1.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜென் சாகி தெரிவித்துள்ளதாவது, இந்திய நாட்டுடன் எங்களின் உறவு அதிக முக்கியத்துவம் உடையது.
இதனால் தான் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல முக்கிய துறைகளில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இந்தியா செயல்படுகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரித்தபோது, அமெரிக்கா பல உதவிகளை செய்தது. கொரோனா தொடர்பில் இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து செய்யும் என்று கூறியிருக்கிறார்.