கடனை திருப்பிக் கொடுக்காத வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள காவாலக்குடி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகேயன் 1 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜனுக்கு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வரதராஜன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் காவாலக்குடி அருகில் பாண்டவையாறு படித்துறையில் வரதராஜன் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் அங்கு வந்த கார்த்திகேயனும் அவரது நண்பரான கண்கொடுத்தவனிதத்தை சேர்ந்த பிரேமவர்ஷன் ஆகிய இருவரும் சேர்ந்து கடன் பணத்த திருப்பி கேட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த கார்த்திகேயனும் அவரது நண்பர் பிரேமவர்ஷனும் சேர்ந்து வரதராஜனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பலத்த காயமடைந்த வரதராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வரதராஜன் கொடுத்த புகாரின்படி போலீசார் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து பிரேமவர்ஷன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.