Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கண் வலி தாங்க முடியாமல் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செக்கடிவிளை பகுதியில் ஞானராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 60 வயதுடைய ஜெபக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபக்கனியின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டு பார்வை சரியாக தெரியாமல் இருந்ததால் அவரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெபக் கனியின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் கண்களில் வலி அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் ஜெபக்கனி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் கண்ணின் வலி சரியாகாததால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெபக்கனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு  திரும்பிய ஞானராஜ் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெபக்கனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |