Categories
உலக செய்திகள்

மாட் ஹான்காக் ராஜினாமா.. 90 நிமிடங்களில் புதிய சுகாதார மந்திரி தேர்வு ..!!

பிரிட்டனின் சுகாதார மந்திரியாக இருந்த மாட் ஹான்காக் பதவி விலகிய 90 நிமிடங்களில் சஜித் ஜாவித் என்பவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிரிட்டன் சுகாதார மந்திரி, மாட் ஹான்காக் தனது உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளிவந்தது. எனவே அவர் சமூக இடைவெளி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாட் ஹான்காக் நேற்று இரவில் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம், அவர் ராஜினாமா செய்ததை அறிவித்த 90 நிமிடங்களில் முன்னாள் சான்சலரும், உள்துறை செயலாளராகவும் இருந்த சஜித் ஜாவித் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்றிலிருந்து தன் பணியை மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தேவையான சமயத்தில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளராக பணியாற்ற என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை கௌரவமாக எண்ணுகிறேன். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் என் பங்கு இருக்கும். அமைச்சரவையிலிருந்து என் நாட்டிற்கு சேவையாற்றுவதை எண்ணி பெருமையடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |