Categories
மாநில செய்திகள்

நான் பேசியது மொழி சார்ந்து மட்டுமே – ஈஸ்வரன் விளக்கம்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் தனது உரையைத் தொடங்கிய போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் “ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது அமித்ஷா கோபம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இவ்வாறு ஜெய்ஹிந் விவகாரம் பெரும் சர்ச்சையாக நிலையில் ஈஸ்வரன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். நான் பேசியது மொழி சார்ந்து மட்டுமே தவிர நாட்டுப்பற்று குறித்து அல்ல. பேரவையில் நான் மொழிப் பிரச்சினை குறித்து பேசிய முழுமையாக கூறாமல் திசைதிருப்பும் வகையில் சிலர் பொய்ப் பரப்புரை செய்கின்றனர். என் தேசப்பற்று பற்றி காங்கிரசுக்கும் தெரியும், பாஜகவும் தெரியும், என்னை அறிந்தவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |