Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஊருக்கு செல்ல பணம் தாங்க” தப்பி வந்த தோட்ட தொழிலார்கள்… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

தோட்டத் தொழிலாளர்கள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தோட்ட வேலைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தோட்ட வேலை  பார்ப்பதற்காக எங்களை அழைத்து வந்தார். மேலும் தங்குமிடம், உணவு அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து கரும்பு தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ள நிலையில் சில நாட்களாக எங்களுக்கு உணவு, சம்பளம் எதுவும் போதியதாக கொடுக்காததால் அதனை தட்டிக் கேட்ட எங்களை அடித்து துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து அவரிடம் ஊருக்கு செல்ல பணம் தரும்படி கேட்ட போது அவர் தர முடியாது என்று மறுத்து கூறிவிட்டார். மேலும் எங்கள் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்து வந்துள்ளோம். இந்நிலையில் அந்த இடத்தில் இருந்து நாங்கள் தப்பித்து வந்துள்ளதால் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |