சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே பதுங்கியிருந்த 2 நபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட தொடங்கியுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்துயுள்ளனர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஜீவா மற்றும் மேகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் இருவரும் சிலிப் பகுதியில் கட்டிட வேலையில் கம்பி கட்டும் பணியை செய்து வந்துள்ளனர்.
அப்போது அங்கே கஞ்சா விற்பனை செய்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அங்கிருந்து 400 கிராம் கஞ்சா வாங்கி வந்துள்ளனர். அதன்பின் அதை சின்ன சின்ன பொட்டலங்களாக பேக்கிங் செய்து கொண்டிருக்கும் போது அந்நேரத்தில் காவல்துறையினர் வந்ததால் அங்கிருந்து அவர்கள் ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.