தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஜூலை-5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நாட்களில் அனாவசியமாக வெளியே சுற்றித் திரிந்தவர்கள் முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து நேற்று ஒரே நாளில் பெறப்பட்ட அபராத பணம் 22.48 லட்சம் ரூபாய் ஆகும். இந்த பணமானது மொத்தம் 11, 241 பேரிடம் இருந்து வசூல் செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.