Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பேருந்து சேவை – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தோற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இயக்கப்படும் பேருந்துகளில் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி இயக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |