விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் ,மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.