Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் இளம்பெண்ணை துன்புறுத்திய மூவர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண்ணிடம் மூன்று நபர்கள் சேர்ந்து தவறாக நடந்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸல் நகரில் நள்ளிரவில் சுமார் ஒரு மணிக்கு ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 3 நபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் அந்த நபர்களிடம் விசாரித்த சமயத்தில் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்று மறைந்துள்ளார்.

அங்கிருந்து, தன் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டுள்ளார். அவரின் நண்பர்கள் உடனடியாக அவசர மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். எனவே காவல்துறையினர், அந்த நபர்களை பார்த்த வழிப்போக்கர்கள் தங்களை சந்திக்குமாறு கேட்டுள்ளனர்.

Categories

Tech |