சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராமசந்திரபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் இரவு நேரத்தில் வழக்கம் போல வேலைக்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.