கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அறிவுச்செல்வன் என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 5 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை அடுத்து கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அறிவுச்செல்வனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் அறிவு செல்வத்திற்கு சிறை காவலர்கள் வழங்கியுள்ளனர்.