தேனி மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் பகவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன திடீரென காணாமல் போயுள்ளது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சரவணன், கார்த்திக் குமார் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் மர்மநபர்களால் திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பகவதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கோழிகள் திருடு போய் உள்ளது. இதனால் திருட்டு நடைபெற்ற பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை பகுதி இளைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் மர்ம நபர் ஒருவர் பகவதியின் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றது பதிவாகி இருந்துள்ளது. இதனை பார்த்த இளைஞர்கள் அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.