விருச்சிகம் ராசி அன்பர்களே.! முன்கோபங்கள் கொள்ள வேண்டாம்.
இன்று சுபவிரயங்கள் கூடிவிடும். இல்லம் தேடி இனிய செய்திகள் வீட்டிற்கு வரும். காலையிலேயே மகிழ்ச்சிகரமான செய்திகள் இருக்கின்றது. மனதில் சந்தோஷம் இருக்கும். அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்களுடன் கோபங்கள் காட்ட வேண்டாம். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்க்கையில் புகழ் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை கொடுக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்றுக்கொள்ளமுடியும். முன் கோபம் கொள்ள வேண்டாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. காதல் சில நேரத்தில் மன வருத்தத்தை கொடுக்கும். சில நேரத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். அதனை சரியான முறையில் புரிந்து கொண்டு வழிநடத்த வேண்டும். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். கல்வி பற்றிய அக்கறையும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்