Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எச்சரிக்கை தேவை….! நினைத்தது நிறைவேறும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கை தேவை.

இன்று நினைத்தது நிறைவேறும். நேசித்தவர்கள் நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகப்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அடுத்தவரிடம் பழகும் போது கவனம் தேவை. ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்ய வேண்டும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களை நம்ப வேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.

வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கின்றது. கல்வியில் சின்னதாக தடையும் இருக்கின்றது. காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிரமத்தை கொடுக்கும். காதல் கசக்கும் படியாக இருக்கும். பழைய நினைவுகள் மனதை வாட்டிக்கொண்டிருக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் காதல் திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 8                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு

 

Categories

Tech |