மர்ம நபர்கள் விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து தொகுதியில் பாபு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு அப்பகுதியில் இருக்கும் சாலையில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பாபுவின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாபு குத்தகைக்கு எடுத்த ஒரு குளத்தில் சிலர் மீன் பிடித்ததால் கோபத்தில் பாபு அவர்களை கண்டித்துள்ளார். இதனால் முன்விரோதம் காரணமாக பாபு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.