பழுது பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொளமாண்டபள்ளி சந்திப்பு சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி சசிகுமார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் படுகாயமடைந்தார்.
அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.