Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டத்திற்கு இ-பாஸ் கட்டாயம் – கட்டாயமில்லை…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தொற்று குறையாத கோவை, நீலகி,ரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு திருமணத்திற்கு இ-பாஸ் பெற வேண்டும். மற்ற மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க இ-பாஸ் தேவை.

Categories

Tech |