Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: இன்று அடுத்த கட்ட ஆலோசனை…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் என அனைவரிடமிருந்தும் 85,935 கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தே வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |