Categories
ஆன்மிகம் இந்து

கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாளாம்… இந்த அருள்மிகு கௌமாரி அம்மன்… உருவான கதை பற்றி பார்ப்போமா…!!!

கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாளாம் இந்த அருள்மிகு கௌமாரி அம்மன் உருவான கதை பற்றி இதில் பார்ப்போம்.

கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன். சின்னமனூர் என்று அழைக்கப்படும் அரிகேசரி நல்லூர் புராணத்தில் 14ம் படலமாக வீரபாண்டிப் படலம் வருகின்றது. அன்றைய அள நாடு என்று அழைக்க்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதி தான் இன்றைய வீரபாண்டி. இராசசிங்கன் எனும் பாண்டிய மன்னன் வைகை நதி மார்க்கமாக வரும் போது, வீரபாண்டியில் உள்ள கோவிலைக் கண்டான். இந்த கோவில்கள்,வீர பாண்டியன் எனும் பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யப்ப்பட்டது. வீர பாண்டியன், இராசசிங்கனின் ஆறாவது பாட்டன் ஆவார் . வீர பாண்டியன் மதுரையில் ஆட்சி செய்த போது, ஊழ் வினையால் இரு கண்களின் ஒளி இழக்க நேர்ந்தது.

அவன் இறைவனை நோக்கி கடுமையான விரதம் இருந்து வேண்ட, இறைவன் அவருக்கு பிரத்தியட்சமாகி, இந்த வீரபாண்டி தலத்தில் உள்ள கௌமாரி தவமியற்றும் இடம் சென்று வேண்டினால் நீ கேட்டது கிடைக்கும் என்றார். இங்கு வந்து அம்மனையும் ஈஸ்வரனையும் வேண்ட பார்வை கிடைக்கப் பெற்றான். கண்பார்வை கிடைக்கப் பெற்ற மன்னன், ஈஸ்வரனுக்கு கண்ணீஸ்வரர் என்ற பெயரிட்டு கற்கோவில் அமைத்தார். இந்த மன்னரின் பெயரால் இந்த கோயிலும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது. இங்கு கௌமாரி அம்மன் என்ற பெயரில் உமாதேவி ஈஸ்வரனை நோக்கி இயற்றினார்.

அதுசமயம் அங்கு வந்து தொல்லை கொடுத்த அசுரனை அருகம்புல்லை முக்கழுப்படையாக மாற்றி அவனை அழிக்க, ஈஸ்வரன் தோன்றி சிவப்பிரசாதம் தர கௌமாரி அம்மன் கன்னி தெய்வமாக மாறினாள். அவள் பூசித்த சிவலிங்கமே திருக்கண்ணீஸ்வர் ஆனார். திருவிழா காலங்களில் இந்த பிரகாரம் மண்டபத்தில் தான் மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல பிரார்த்தனைக்கு இந்த இடம் ஒதுக்கப்படும்.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றத்துடன் 22 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கொடியேற்றம் நாள் முதல் 21 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருப்பர். வீரபாண்டி கௌமாரி அம்மனிடம் வேண்டினால் கேட்ட வரம் நிறைவேறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

Categories

Tech |