Categories
தேசிய செய்திகள்

தனியார்மயமாகும் இரண்டு வங்கிகள்…. எதெல்லாம் தெரியுமா..???

இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் இந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  நிதி ஆயோக்கியின் பரிந்துரை குறித்து உயர்நிலை குழு ஆலோசித்து வருகிறது. குழு முடிவெடுத்தபின் பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால் இரு வங்கிகளும் தனியார்மயமாக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |