ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.
தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
போன்பே மூலம் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள், உங்கள் செயலியில் ஃபாஸ்டேக் என்ற ஐகானைக் கிளிக் செய்யவும். அதிலிருக்கும் வங்கிகளின் பட்டியலிலிருந்து, உங்கள் ஃபாஸ்டேக் வழங்கும் வங்கியைத் தேர்வுசெய்யவேண்டும். பின்னர் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். தொடர்ந்து உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள்.
கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள், மொபைலில் கூகுள் பே செயலியைத் திறந்து New என்பதை தேர்வுசெய்க. பின்னர் மெனுவிலிருந்து, More என்பதை கிளிக் செய்து FASTag ரீசார்ஜ் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு ஃபாஸ்டேக் வழங்கும் வங்கியைத் தேர்வுசெய்ய வேண்டும். தொடர்ந்து கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். பின்னர் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய பணம் செலுத்துங்கள்.