Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை எடுக்க முயற்சிக்கும் போது… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து தேவர் சாலை செல்லும் ரோட்டில் மாலை 5 மணி அளவில் ஒரு கார் சென்றுள்ளது. இந்த காரை கூடலூர் பகுதியில் வசிக்கும் அணில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் புஷ்பகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பின் அந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் அணில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டை பையிலிருந்து தவறிக் கீழே விழுந்த செல்போனை அணில் எடுக்க முயற்சி செய்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

Categories

Tech |