Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தலனா எப்படி… துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக மயிலம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

இதனையடுத்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் சங்கருக்கு சிறை காவலர்கள் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |