Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்து சேவை…. பேருந்து இயக்கப்படும் வழிகள்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதியளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து 27 மாவட்டங்களில் பயணிக்க ஏதுவாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து திருச்சி -கரூர் வழித்தடத்தில் பெட்டவாய்த்தலை வரையும், திருச்சி- சேலம் வழித்தடத்தில் தொட்டியம் மேக்கல் நாயக்கன்பட்டி வரையும், திருச்சி- தஞ்சாவூர் வழித்தடத்தில் வாழவந்தான் கோட்டை வரையும், துறையூர் – நாமக்கல் வழித்தடத்தில் பவித்திரம் வரையும், அரியலூர் – தஞ்சாவூர் வழித்தடத்தில் திருமானூர் வரையும், ஜெயம்கொண்டம்- கும்பகோணம் வழித்தடத்தில் அணைக்கரை வரையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |