தேசிய கபடி போட்டி நடுவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் தத்தனேரி கொன்னவாயன் பகுதியில் குட்டி என்ற பாலசுப்பிரமணியராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய கபடி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது கபடி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் இவர் மற்ற நேரங்களில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதிலிருந்து அவருக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் கபடி விளையாட்டிற்காக செலவு செய்துள்ளார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதற்கிடையே கணவன் மனைவி இருவருக்கும் சண்டை நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இதனால் பாலசுப்பிரமணியராஜா மன அழுத்தம் காரணமாக அவரது வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.