நேற்று சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சோமாலியாவில் அரசுக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் மத்திய சோமாலியாவின் விசில் நகரில் கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ராணுவ வீரர்கள் 2 பேர் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அமைச்சர் அந்த தற்கொலைப்படை தாக்குதலின் போது நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகளுக்கும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.