Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்… டெல்லியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!!

டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதை முன்னிட்டு டெல்லியில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமணங்கள், ஓட்டல்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் அதிகளவு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மார்க்கெட் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி அலைமோதியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அலை தற்போது சில மாநிலங்களில் பரவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதும் பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் என்று அஞ்சப்படுகின்றது.

Categories

Tech |