சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகி 30 வாரத்திற்கு பின் தற்போது ஒரு அழகான பிள்ளையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது 30 வாரங்களுக்கு பிறகு தன்னுடைய 11 ஆவது வயதில் ஒரு அழகான பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியினுடைய குடும்பத்தினர்கள் சிறுமி கர்ப்பமடைந்ததும், அழகான பிள்ளையை பெற்றெடுத்ததும் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறுமியும், சிறுமியினுடைய குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே 11 வயது சிறுமி குழந்தை பெற்றது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.