Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘ராட்சசன்‌’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் படமாக வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது .

GOQii: Akshay Kumar invests in GOQii

இதில் ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . இந்நிலையில் ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை ராஜேஷ் வர்மா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |