Categories
தேசிய செய்திகள்

இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை..!!  

தமிழிசை சௌந்தரராஜன் இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் 

கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர்  தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.

Image result for Tamil Nadu Soundararajan sworn in as Telangana Governor today

இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொள்கின்றனர்.

Categories

Tech |