பிரான்சில் கோடைகாலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரூற்றில் குளித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சில் உள்ள Dijon என்ற நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு Place de la République என்ற பகுதியில் இருக்கும் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் ஊற்றில் ஒரு பெண் குளித்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் அவர் மீது சந்தேகமடைந்து, அவரின் அருகில் சென்றுள்ளார்கள்.
மேலும் அந்த பெண்ணை அங்கேயிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண், தன் பையிலிருந்த யூரோ தாள்களை வீசி எறிந்துள்ளார். 10, 20, 50 என்று யூரோ தாள்கள் கொட்டிக்கிடந்துள்ளது. அதன்பிறகு உடனடியாக காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விட்டனர்.
அவரிடமிருந்த பணமும் கைப்பற்றப்பட்டது. சுமார் 50 ஆயிரம் யூரோக்கள் வைத்திருந்துள்ளார். இதில் 47,200 யூரோக்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மீதியுள்ள தாள்கள் நீரூற்றில் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.