Categories
உலக செய்திகள்

பண்டிகைய சிறப்பா கொண்டாட நெனச்சாங்க …. ஆனா இப்படி நடந்துருச்சி …. பிரபல நாட்டில் நடந்த சோகம் ….!!!

 பண்டிகையை முன்னிட்டு பசுக்களை வாங்க காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் விபத்தில்   சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

வங்காளதேச நாட்டில் ஜஷூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பசுக்களை வாங்க காரில் சென்றுள்ளனர். அவர்கள் பேனாபூல் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நயன் அலி , ஜோனி மியா  உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சகாபுதீன் என்ற நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |