Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிக்கு பழியாக இதை பண்ணினேன்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையைக் கொலை செய்ததிற்காக  பழி வாங்கும் நோக்கத்தோடு  ஒருவர் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கோதண்டம் மரமநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரகோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் தொழிற்சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் பதுங்கி இருந்த 5 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோதண்டனின் உறவினரான மனோஜ் என்பவர் தனது நண்பர்களான முகேஷ் குமார், சுனில், சுப்பிரமணி மற்றும் 17 வயது சிறுவர் போன்றோருடன் இணைந்து கோதண்டனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போது காவல்துறையினருக்கு  திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது மனோஜின் தந்தையை கோதண்டம் கொலை செய்துள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக மனோஜ் கோதண்டத்தை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |