கிணற்றில் விழுந்த எருமை மாட்டை நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் ராஜபிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் எருமை மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள 10 அடி கிணற்றில் ஒரு எருமை மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. மேலும் அந்தக் கிணற்றில் 40 அடி ஆழம் இருந்ததால் அந்த மாடு மிகவும் சத்தம் போட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கிணற்றிலிருந்து சத்தம் வருவதை கேட்டு உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் கிணற்றுக்குள் மாடு விழுந்திருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் விழுந்த மாட்டை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.