யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது .
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு – நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் தாமஸ் ஹோல்ஸ் 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க , இவரை தொடர்ந்து பாட்ரிக்ஸ் ஷிக் 80-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு முன் நெதர்லாந்து வீரர் மாத்திஸ் டி லிட் 55-வது நிமிடத்தில் பந்தை கையில் தடுத்ததால்அவருக்கு ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய நெதர்லாந்து அணி விளையாடியது .
இறுதியாக செக்குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது . இதையடுத்து இன்று அதிகாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம்- போர்ச்சுக்கல் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் தோர்கன் ஹசார்ட் 42-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், இறுதியாக பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.