Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியும் மோசடி பண்றாங்களா…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மருத்துவரின் பெயரில் முகநூல் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரான இளம்வழுதி என்பவரின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பணமோசடி நடைபெற்றது வந்துள்ளது. இவ்வாறாக அரசியல் பிரமுகர் மற்றும் உயரதிகாரிகளின் பெயரிலும் போலியான முகநூலில் கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது போல் ஒரு மர்ம கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மருத்துவரின் நண்பர்களிடம் மர்ம கும்பல் முகநூல் கணக்கில் மெசஞ்சர் பயன்படுத்தி பண உதவி கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இளம்வழுதியின் நண்பர்கள் சிலர் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இளம்வழுதி தனது நண்பர்களிடம் அது போலியான முகநூல் பக்கம் எனவும், பண உதவி கேட்டு நான் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதன்பின் அதிர்ச்சியடைந்த இளம்வழுதி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் பண மோசடி செய்யும் மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |