வாழ காரணமில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டவரை காவல் துறையினர் விரைந்து சென்று அதிரடியாக காப்பாற்றியுள்ளனர்.
தற்போது விரக்தியின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, முன்பு தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துவிட்டு பின்னர், இறந்துவிடுகின்றனர். ஒரு சில சமயம் நேரலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்” தான் அனைத்தையும் இழந்து விட்டேன் இனி வாழ்வதில் பயனில்லை” என்று ஒருவர் டுவிட் செய்தார். இதைக்கண்ட சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் எந்த தவறான முடிவையும் எடுக்க வேண்டாம் என்று கூறி 044-23452334 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வேண்டினர். அதைத்தொடர்ந்து அந்த நபர் தொடர்பு கொண்டு பேசி தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த நபரிடம் பேசியதால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றிவிட்டனர்.