மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அந்த பகுதிக்கு ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு வெளியே வரும் குடிநீரை பரிசோதனை செய்தார்.
அதன் பின்னர் அங்கு நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ்குமார், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன், ஒன்றிய மேலாளர் பெருமாள், ஒன்றிய பொறியாளர் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.