Categories
மாநில செய்திகள்

நீதியரசர்கள் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளின் தடுப்பூசி…. உதயநிதி ஸ்டாலின்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீதியரசர்களை சமுதாயத்தில் நடைபெறும் அநீதிகளை தடுக்கும் தடுப்பூசி என்று குறிப்பிட்டார்.

Categories

Tech |