தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள எர்ணம்பட்டியில் உள்ள மேற்கு தெருவில் இளஞ்செழியன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் இளஞ்செழியன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு திருப்பூர் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை பிடித்து தேனிக்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமியை தனியார் தொண்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் கடத்தி சென்ற இளஞ்செழியனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.