Categories
மாநில செய்திகள்

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ஏலம்… தமிழ்நாடு அரசு…!!!

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுகின்றது தமிழ்நாடு அரசு.

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் நாளை மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஏலத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் தமிழகத்தில் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவி வருவதால் மின்னணு முறையில் பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மின்னணு முறை மூலமாக பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |