நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால கடன் உதவியாக தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் கோடி கடன் வங்கிகள் மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.