Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் இதை பார்க்கிறோம்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… அவதிக்குள்ளான பொதுமக்கள்…!!

மின்கம்பத்தின் மீது ஏறும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மரநாயின் உடலை ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவுர் பகுதியில் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மின்வாரிய ஊழியர்கள்அனைத்து மின் தடங்களையும் ஆய்வுசெய்தனர்.

அப்போது அரசன் ஏரி பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்த போது மின்கம்பத்தில் மேலே ஏறிய மரநாய் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து மின்கம்பத்தின் மேலே கிடந்தது தெரியவந்துள்ளது. எனவே மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தில் ஏறி மரநாயை அப்புறப்படுத்தி மின் கம்பிகளை பழுது பார்த்துள்ளனர். அதன் பின்னர் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |