Categories
உலக செய்திகள்

இன்னும் 1 மாசம் தான் டைம் இருக்கு…. வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா….எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க மருத்துவர்….!!

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கு தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 20% பேர் இந்த டெல்டா வகையால் பாதிப்படைந்துள்ளார்கள்.

இதனையடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விட்டால் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவி மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கிவிடும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணரான Eric Feigel Ding எச்சரித்துள்ளார்.

Categories

Tech |