லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதால் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் நரேன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.